Skip to main content

பொதுத் தமிழ் - திருக்குறள் - அறத்துப்பால் /இல்லறவியல் /ஒழுக்கமுடைமை

 பொதுத் தமிழ் - திருக்குறள் - அறத்துப்பால் /இல்லறவியல் /ஒழுக்கமுடைமை

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

பொருள்: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை.

பொருள்: ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்

133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.


பொருள்: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பொருள்: கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொருள்: பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.

பொருள்: மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.

137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

பொருள்: நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

பொருள்: நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.

பொருள்: தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

பொருள்: உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்





Popular posts from this blog

இந்திய ஆறுகள் மொத்தம் எத்தனை ? அதில் அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் எத்தனை?

விலங்களின் அறிவியல் பெயர் பட்டியல்

கல்வெட்டு பற்றிய படிப்பு என்ன?|TNPSC Coaching institute in Trichy|TNPSC Center in Trichy

ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப்படுபவர்களின் பட்டியல் ?

2005 முதல் 2020 வரை தமிழ்நாட்டை தாக்கிய புயல்கள் Barathi IAS Academy Trichy Barathi TNPSC Coaching Center Trichy IAS Academy

இந்திய ரயில்வே மண்டலம் & தலைமையிடம்

இந்தியாவில் ஜனவரி 25ம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்-www.tnpsctrichy.com-TNPSC Center in Trichy-IAS Academy in Trichy-Barathi TNPSC Coaching Center Trichy-Barathi IAS Academy Trichy|TNPSC Coaching institute in Trichy

உயர் நீதிமன்றத்தில் உதவி புரொகிராமர் பணி -Barathi IAS Academy Trichy - Barathi TNPSC Coaching Center Trichy|TNPSC Coaching institute in Trichy

எத்தனை ஆறுகள் இமயமலையில் உருவாகிறது?