பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் - 2019
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியை கண்காணிப்பதற்காக இந்தியாவின் ”ரிசாட்-2பிஆர்1” என்ற செயற்கைக்கோளை விண்ணில் டிசம்பர் 2019 செலுத்தியது.
இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது. இதனுடன் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள் ஆகியவை அனுப்பப்படுகின்றன. பூமியில் இருந்து 576 கி.மீ உயரத்தில் 37 டிகிரியில் நிலைநிறுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர் ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள 628 கிலோ எடை கொண்ட ”ரிசாட்-2பி R1” செயற்கைக்கோளில் நவீன ரேடார்கள் இடம்பெற்றுள்ளன.
இவை பூமியை துல்லியமாக படம்பிடிக்கும். இந்த தகவல்கள் பாதுகாப்புத் துறைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வேளாண்மை, வனக்கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை & ராணுவ எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உதவ உள்ளது. இந்த செயற்கைக்கோள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இது பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 50வது திட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 75வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 2019
Current Affairs December 2019
Barathi IAS Academy Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO
www.tnpsctrichy.com
0 Comments