TNPSC பொதுத்தமிழ் - பெயரெச்சம் - பெயரெச்சத்தின் வகைகள் - PODHUTAMIL - GRAMMAR - Bharathi IAS Academy
TNPSC - பெயரெச்சம் - பெயரெச்சத்தின் வகைகள் - PODHUTAMIL - GRAMMAR பெயரெச்சம் பெயரெச்சம்: பெயர்ச்சொல்லைக்கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம். முற்றுப் பெறாத ஒருவினைச் சொல் ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் (எ.கா) படித்த மாணவன், வந்த வாகனம், தந்த பணம், கண்ட கனவு, சென்ற நாட்கள் மேற்கணடவற்றுள் படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும். பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது? படித்த மாணவன்,வந்த வாகனம்,தந்த பணம்,கண்ட கனவு,சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால்., நீங்கள் முதலில் உள்ள படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவற்றை கணக்கிட்டுதான் பெயரெச்சம் என எண்ண வேண்டும். அதற்காகத்தான் அவை அடிக்கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது. முதலில் படித்த, வந்த, சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார...